Monday, September 7, 2015

மணல் வீடு

நெடுஞ்சமுத்திரத்தின்
ஆதி கரையை போல
விரிந்திருக்கிறேன் நான்.
நிறைய பாதங்கள்
கடந்த கரையாயினும்
கொஞ்சமாய் சுவடுகளை
தேக்கி வைத்துள்ளேன்,
பாதங்களால் மிதிபட்ட
கரையின் மீது
மணல் வீடுகளை
கட்டியும் இடித்தும்
கடந்து போகிறது காலம்...
-மணி





3 comments:

  1. அருமை ...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்

    ReplyDelete
  2. புதுக்கோட்டை மாநாட்டிற்கான வருகையாளர்கள் பட்டியல் மூலமாக தங்களது தளம் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    ReplyDelete