Tuesday, June 30, 2015

மன மன மெட்ரோ மனதில்!

காலையிலேயே சீஃப் போன் செய்துவிட்டார்  ‘வடபழனி  மெட்ரோ ஸ்டேசன் போய்டுங்கஎன்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.

காமா சோமாவென பல் தேய்த்து கொண்டிருந்தவன் அசுர வேகத்தில் காலைக் கடன்களை முடித்து3 கோதுமை தோசைகளை வெந்து வேகாமலும் விழுங்கிவிட்டு நங்கநல்லூர் பஸ் ஸ்டேண்டில் ஆஜராகியிருந்தேன்.

அரை மணி நேரம் ஆகியும் பஸ் வரவில்லை.

வாட் தே ஆர் திங்கிங், தே மே நாட் ஹேவ் டைமிங், பட் தே ஷுட் கன்சிடர் பப்ளிக்ஸ் நீட்என்று ஒரு மாமா பொங்கிக் கொண்டிருந்தார். வயது 70 இருக்கும். நங்கநல்லூர் நிறைய அம்பிகளையும், ரூல்ஸ் ராமானுஜங்களையும் கொண்ட பகுதி என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

அதற்கு மேலும் பேருந்தை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்து பழவந்தாங்கல் ஸ்டேஷன் செல்ல ஆட்டோ பிடிக்கலானேன்.

ஊரணிபுரம் கடைத்தெருவுக்கும் கரடிக்கொல்லைக்கும் ஒரே நாளில் 20 தடவையெல்லாம் நடந்து சென்ற காலம் மாறி, அதைவிட குறைந்த தொலைவுகளுக்கே ஆட்டோக்காரர்களை தேடும் நிலையில் நானிருப்பது ஆச்சரியமானது தான்.

ஆட்டோ, கே.கே.நகர் தாண்டியிருந்தது. திரும்பவும் சீஃபிடம் இருந்து போன். மெட்ரோ ரயில் கிளம்பிடுச்சுஜெயலலிதா கொடியசைச்சு தொடங்கி வச்சுட்டாங்கஎன்று பரபரப்பூட்டினார்.

ஆட்டோக்காரரிடம் அவசரத்தை சொன்னால், ‘இறங்கி நடந்து போயேன்என்று பல்ப் கொடுத்தார்அந்த இடத்தில் மட்டும் நங்கநல்லூர் மாமா இருந்திருந்தால், ‘இருங்கய்யா, மெட்ரோ வந்துடுச்சு இன்னும் எத்தனை நாள் தான் மீட்டர் போடாம ஆட்டோ ஓட்டுவீங்கஎன்று நிச்சயம் பொங்கியிருந்திருப்பார்.

ஒரு வழியாக வடபழனி மெட்ரோ ஸ்டேஷன் வந்ததுகீழே கேட் போட்டு மூடி வைத்திருந்தார்கள். ரஜினி படத்தை முதல் நாள் பார்ப்பதற்கான கூட்டத்தை போல் நீண்ட நெடிய மக்கள் திரள்.
                                           
                                                

திடீரென்று கேட் திறக்கப்பட்டது எல்லோரும் ஓடி மீண்டும் கியூவில் நின்றார்கள்.  டைல்ஸ், ஜிகு ஜிகு லைட், கோர்ட் சூட் பெண்கள், எஸ்கேலேட்டர் என ., ஸ்கை வாக்கை ஞாபகப்படுத்தியது அந்த ரயில் நிலையம்.

                                                       

ஆட்கள் போகப்போக கியூ நீண்டு கொண்டு தான் இருந்ததே தவிர குறையவில்லை.  ‘சார்நான் ப்ரெஸ்உள்ள போகனும்என்று அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டேன்.

 ‘அதெல்லாம் முடியாது சார். பேய்டு ஸோன்’ என்று பந்தா காட்டினார்.

காவல்துறை உங்கள் நண்பன் என்பார்களே என்ற நம்பிக்கையில் ஒரு மீசை வச்ச இன்ஸிடம் அனுமதி கேட்டேன்.

‘இதென்ன பொலிட்டிக்கல் ஈவண்டா சார் ப்ரெஸ்னு சொல்லிட்டு முன்னாடி போய் கவர் பண்றதுக்குவெயிட் பண்ணுங்க பாக்கலாம்’ என்று பொட்டில் அடிக்காத குறையாக கறார் காட்டினார்.

எல்லோரும் டோக்கன், ஸ்மார்ட் கார்டுகளை வாங்கிக்கொண்டு முன்னேறினார்கள்அந்த சமயம் ஒரு பெண் அதிகாரி அந்த பக்கம் வந்தார். 30-களில் தான் அவருக்கு வயதிருக்கும்.


‘ எந்த பத்திரிகை சார்?’

‘ஹிண்டு மேடம்..’

‘ஆஹ்ன்..???’

‘ஹிண்டு தமிழ் மேடம்  தி இந்து..’

அவர் முகத்தில் பல்ப் எரிந்ததுபேப்பர் சூப்பரா இருக்குங்க, மாயா பஜார், பெண் இன்று எல்லாம் செம என்றபடியே தனது ஐடி கார்டை சென்சாரில் வைத்து பிளாட்பார்முக்குள் அனுமதித்தார்.

ஆப்போசிட் ஜெண்டர் தான் ஹெல்ப் பண்ணுவாங்க என்று வாழ்க்கையில் பலரால் சொல்லப்பட்ட ஒரு கருத்தியல், கண் முன்னே மெய்யான மகிழ்ச்சியில் மெட்ரோ பிளாட்பாரத்துக்குள் சென்றேன்.

அங்கே காவல்துறையினர் மெட்ரோ ரயிலுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். கோயம்பேடுஆலந்தூர் செல்ல 40 ரூபாய் கட்டணம். அதை சிலர் வரவேற்றும், பலர் தூற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.

தி.நகரில் சில நகை கடைகளின் வாசலின் செல்லும் போதே /சி வெளியே அடிக்கும். அப்படித்தான் மெட்ரோ ரயில் கதவு திறக்கும் போதெல்லாம் /சி எட்டிப்பார்த்தது.

                                                       

நான்கைந்து பேரிடம் கருத்து கேட்டாயிற்று. வந்தவர் போனவர்களை கண்டதும். லேசாக ஆசை தொற்றிக்கொண்டது. ஆலந்தூர் வரை டிக்கெட் ( டோக்கன்) வாங்கி ரயில் ஏறினேன். உள்ளே அத்தனை குளுமை.


ரயிலில் இருந்த 70 சதவீதம் பேர் கரடு முரடாக யோகா செய்து கொண்டிருந்தனர் மன்னிக்கவும் அப்படியான ஆங்கிளில் செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர்.  மீதமிருந்த 30 % பேர் டிவிக்காரர்கள்.

‘‘அதாவது சென்னையின் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு வரப்பிரசாதமாக வந்துள்ள மெட்ரோ  இன்று ஓடுகிறது. அதுகுறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என்று குறுக்கும் நெறுக்குமாக மெட்ரோ ரயிலின் சக்கரம் முதல் சகலம் வரை டிவிக்காரர்கள் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தார்.

100 சூப்பர் ஸ்டார் படங்களை, வெளியான முதல் நாள் முதல் ஷோ பார்த்த மகிழ்ச்சி எல்லோர் கண்களிலும் தெரிந்தது. மெட்ரோவிலும் பெரிய குறைகள் ஏதும் இல்லைஎன்ன…. டோக்கன் வைத்தால் தான் உள்ளேயே செல்ல முடியும்

பழவந்தாங்கலிலும், சானிட்டோரியத்திலும், பீச் ஒன்னு என்று ஆன் தி ஸ்பாட்டில் டிக்கெட் எடுத்துவிட்டு, நகரும் ரயிலில் புட் போர்டு அடிக்கிற கதையெல்லாம் இங்கு நடக்காது.

முதல் நாளன்று பிளாட்பார்முக்கு 6 என இருக்கைகள் இருந்தன. முக்கியமாக மெட்ரோவில் பயணிக்க விரும்புகிறவர்கள், கக்கா சுச்சாவெல்லாம் வீட்டிலேயே போய்விட்டு வந்து விடுவது நல்லதுஏனென்றல் கழிப்பறைகள் இன்னும் முறையாக கட்டிமுடிக்கப்படவில்லை. கட்டி முடிக்கப்பட்ட சில கழிவறைகளும் அதிகாரிகளுக்காம்.

‘ஏய்… மாப்பிளை எக்மோருக்கு இந்த பிளாட்பார்ம்டா அங்க ஏன் நிக்குற’ என்று நடுவில் குதித்து ட்ராக் கிராஸ் பண்ணி அந்த பக்கம் போகிற அமர்க்களம் இங்கு பண்ண முடியாதுஏனென்றால் இங்கே ட்ராக்கிலும் கரண்ட் பாய்கிறது.

கோயம்பேட்டுக்கும் ஆலந்தூருக்கும் 40 ரூபாய் கட்டணம் என்றாலும் /சி வோல்வோ பஸ்ஸில் ட்ராஃபிக்கில் திணறி செல்வதை ஒப்பிட்டால் அது குறைவு தான்என்றாலும் இன்னும் கொஞ்சம் குறைக்க முன்னாள் மக்களின் முதல்வர் மனது வைக்க வேண்டும். 

இன்றைக்கு மெட்ரோவுக்கு 100-க்கு 99 மார்க் போடலாம். ஆனால் அதே மதிப்பெண்ணை தொடர்ந்துஅளிக்க முடியுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதல் மெட்ரோ ரயிலை ஓட்டிய பெண்ணை பற்றியும் சொல்லியாக வேண்டும். செம கியூட்….


ட்ரைவிங்கை சொன்னேன்….

மெட்ரோ ரயில்.. மொத்தத்தில் ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ்.

1 comment:

  1. Sweet Experience ah? Rightu nee Nadathu :) Btw , the script flow is good :)

    ReplyDelete